டெல்லி தீர்ப்பாயத்திலும் யு/ஏ: வெளியீட்டிற்கான 'ஐ' பணிகள் மும்முரம்

டெல்லி தீர்ப்பாயத்திலும் 'ஐ' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தின் பிரதிகளை வெளிநா
ட்டிற்கு அனுப்பும் பணிகள் தொடங்கியது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஐ'. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்தார்கள். யு/ஏ சான்றிதழுடன் வெளியிட்டால் 30% வரி கட்ட வேண்டும் என்பதால் படக்குழு டெல்லி தீர்பபாயத்தை அணுகியது.

இதனால், 14ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தினாலும் சென்சார் சான்றிதழ் என்ன என்பது தெரியாமல் இருந்தது. வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டிய பிரதிகளையும் அனுப்பாமல் இருந்தார்கள்.

இந்நிலையில் டெல்லி தீர்ப்பாயமும் 'ஐ' படத்திற்கு யு/ஏ தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால், யு/ஏ சான்றிதழுடன் படத்தின் பிரதிகளை வெளிநாட்டிற்கு அனுப்பும் பணிகள் தொடங்கியது. தமிழ் மற்றும் இந்தி பிரதிகள் அனுப்பப்பட்டுவிட்டன. தெலுங்கு பிரதிகள் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அனைத்து பணிகளும் முடிந்து, பிரதிகள் அனுப்பும் பணிகள் தொடங்கிவிட்டதால் 'ஐ' வெளியீடு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment