ரஜினி-கமல் இணையபோகும் படம் பி.கே?

இந்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா படம் பி.கே. இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது ஜெமினி லேப் நிறுவனம்.

இதில் கமலை நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் பேசினார்களாம். கதையில் சில பல திருத்தங்களை சொன்ன கமல், அதற்கு உடன்பட்டால் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

இயக்கப்போவது யாராக்கும்? மூன்று முக்கிய இயக்குனர்களிடம் பேசியிருக்கிறார்கள். மூவருமே இந்த படத்தை இயக்க தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை முடிவு செய்ய வேண்டியது கமலும் ஜெமினியும்தான்.

இந்த நிலையில்தான் பி.கே படத்தில் சஞ்சய் தத் நடித்த வேடத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு வார்த்தையை துவங்கியிருக்கிறது ஜெமினி.

இந்தி கதையில் சஞ்சய்தத் இறந்துவிடுவார். தமிழில் ரஜினியை நடிக்கக் கூட வைத்துவிட முடியும். ஆனால் அவர் இறப்பதை போல காண்பித்தால், அவரது ரசிகர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்களே?

No comments:

Post a Comment