விஜய் 60 வது படத்தின் டைரக்டர் இவரா?

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் தனது 58ஆவது படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.இதனையடுத்து தாணு தயாரிப்பில், அட்லீ இயக்கும் படமொன்றில் விஜய் நடிக்க இருப்பது அவரது 59 ஆவது படம். இப்படம் குறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.விஜய்யின் 60 ஆவது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் எம். சசிகுமார், ஷங்கர், பிரபுதேவா, கௌதம் மேனன் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இவற்றில் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் கதை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறுகிறதாம்.எனவே பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் விஜய். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகவிருக்கிறதாம். அட்லீ இயக்க உள்ள விஜய் 59 படத்திற்குப் பிறகு பிரபுதேவா இயக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.

No comments:

Post a Comment