விக்ரம் படத்தில் இணையும் காஜல்,பிரியா ஆனந்த்

10 எண்றதுக்குள்ள படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் ஒரே நேரத்தில் இருவேறு படங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை கௌதம் மேனனும் மற்றொரு படத்தை அரிமா நம்பி புகழ் ஆனந்த் ஷங்கரும் இயக்கவுள்ளனர். இதில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என முன்பு சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில்தான் நயன்தாரா நடிப்பார் எனவும் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இம்மூன்று கதாநாயகிகளும் விக்ரமுடன் இணைவது இதுவே முதல்முறையாகும். இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment