பாலிவுட் டில் கொடிகட்டிப் பறக்கும் அஜித் ஸ்டைல்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்கள் நால்வருக்கும் தான் ரசிகர்கள் அதிகம் அதிலும் அஜித்துக்கு எல்லாம் டீன் ஏஜ் ரசிகர்கள். எந்த கதாநாயகனும் வளர்ந்த பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டார்கள் பாசிடிவ் ரோல்களில் மட்டுமே நடிப்பார்கள் என்று இருந்தை மங்காத்தா படத்தின் மூலம் மாற்றியமைத்தவர் அஜித்.

அதோடு தனக்கு வயதாகிவிட்டது என்பதை மறைக்காமல் தைரியமாக சால்ட்&பெப்பர் லுக்கில் நடித்தார். இந்த கெட்டப் ரசிகர்களை கவர அதை தொடர்ந்து ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என வரிசையாக இதே தோற்றத்தில் நடித்தார்.

இந்நிலையில் பாலிவுட் இணையத்தளம் ஒன்று சால்ட்&பெப்பர் லுக்கில் யார் அழகாக இருக்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு போட்டி வைத்துள்ளது. இதில் அக்‌ஷய் குமார், அமீர் கான், மிலன் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்லோனி மற்றும் அஜித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதில் தமிழ்நாட்டு ரசிகர்களால் தல என்று அன்பாக அழைப்படும் அஜித்தே அதிக வாக்குகள் பெற்று தற்போது வரை முன்னணியில் இருக்கிறார். இவரை அடுத்து அக்‌ஷய் குமார் இருக்கிறார்.

No comments:

Post a Comment