6 நிமிட கர்ஜனை; விஜய் அவார்ட்ஸை அதிர வைத்த அஜித் ரசிகர்கள்


பொதுவா அஜித் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு முன் அவர் கடைசியாக கலைஞரின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மேடையிலேயே கொட்டித் தீர்த்தார். இதற்கு பலத்த ஆதரவோடு ரஜினியும் எழுந்து நின்று கை தட்டியது அன்றைய அரசியலை கொஞ்சம் அதிர வைத்தது.

ஆனால் இந்த 6 நிமிட கர்ஜனை அரங்கேறியது விஜய் டி.வி நடத்தும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தான். விஜய் டி.வி. மட்டுமில்ல, இண்டர்நேஷனல் சேனலே வந்து கூப்பிட்டாலும் சாரி என்ற ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார் அஜித், இவரை இந்த மாதிரி பொது நிகழ்ச்சிகளில் பார்க்க மாட்டோமா என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஜித்துக்கு விருது வழங்கப்பட்டது இந்த விருதை அஜித் சார்பாக வேறு ஒருவர் பெற்றுக் கொண்டார். அஜித் பெயரை மேடையில் அறிவித்தார்கள் அப்போது அஜித் ரசிகர்கள் தல ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்…. என்று கிட்டத்தட்ட 6 நிமிடத்துக்கு ஓசையை எழுப்பியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஷாருக் கான் இதனை கண்டு மெய் சிலிர்த்து போனதாகவும் கூறப்படுகிறது…

No comments:

Post a Comment