மீம் கிரியேட்டர்களை இமைக்கா நொடிகள் திருப்திப்படுத்தும் – பட்டுக்கோட்டை பிரபாகர்

எல்லாரையுமே ட்ரோல் செய்யும் மீம் கிரியேட்டர்களையும் இமைக்கா நொடிகள் படம் திருப்திப்படுத்தும் என வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.

த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படம் டிமாண்டி காலனி. இப்படத்தில் நாயகர்களை விட ரியல் நாயகனாக ரசிகர்களிடம் பாராட்டை பெற்றவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஒரே படத்தால் சென்னையில் அமைந்திருந்த டிமாண்டி காலனி பகுதியை பார்த்தே மக்களை பயம் கொள்ள செய்தார். உண்மையாகவே அங்கு பேய் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வகையில், படம் மக்களிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் இரண்டாவது படம் இமைக்கா நொடிகள் என அறிவிக்கப்பட்டது.

கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்தில் அதர்வா முதலில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அப்படத்திற்கு ஏற்படாத எதிர்பார்ப்பு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் உருவாகியது. இவர்களை அனைவரை விட கவனம் ஈர்த்தவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். தமிழில் நடிகராக அறிமுகமாகும் இவருக்கு மிரட்டலான வில்லன் வேடம் என்பது படத்தின் ட்ரைலரிலேயே காட்டப்பட்டு விட்டது. நயனின் அப்பாவி கணவராக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு இன்று நடைபெற்று இருக்கிறது. வழக்கம் போல நயன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருடன் ஹீரோவான அதர்வாவும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மற்ற படக்குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பட்டுக்கோட்டை பிரபாகர், இப்போது எல்லார் கையில் சமூக கணக்குகள், மொபைல்கள் இருப்பதால் எல்லாருமே படத்தை விமர்சிக்க தொடங்கி விட்டனர். படத்தை பார்த்து விட்டு தங்களுக்கு தோன்றுவதை அப்பட்டமாக எழுதி விடுகின்றனர். ட்ரோல், மீம்களால் வறுத்தெடுக்கின்றனர். அவர்களை கூட இப்படம் திருப்திப்படுத்தும். அதனால் இமைக்கா நொடிகளுக்கு யாரும் மீம் போட முடியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படத்தின் வசனகர்த்தாவும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த கண்ணம்மா பாடல்கள்.!

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் முன்னணி பாலிவுட் நடிகர்கள்

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் 34 பேர் அடங்கிய பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது.

இதில், அமெரிக்காவின் ’அயர்ன் மேன்’ புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர் 80 மில்லியன் டாலர்கள் சம்பளம் வாங்கி முதல் இடத்திலும், ஆசியாவின் மிகப்பெரிய நடிகரான ஜாக்கி சான் 50 மில்லியன் டாலர் சம்பளத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் ஹாலிவுட்டின் முன்னனி நடிகர்களான 'டைட்டானிக்' புகழ் லியானார்டோ டி கேப்ரியோ மற்றும் 'பைரட்ஸ் ஆப் த கரீபியன்' புகழ் ஜானி டெப் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, அமிதாப் பச்சன், சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் முதல் பத்து இடங்களை எட்டியுள்ளனர்.கடந்த ஆண்டு மட்டும் சினிமா மற்றும் விளம்பரங்களால் அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் ஆகியோர் 33.5 மில்லியன் டாலர்கள் சம்பளம் பெற்றுள்ளனர் என்றும், அவர்களைவிட சற்று குறைவாக அக்‌ஷய் குமார் 32.5 மில்லியன் சம்பளம் பெற்றிருப்பதாகவும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ஷாருக் கான், 26 மில்லியன் டாலர் வருமானம் பெற்று 18 ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆச்சர்யம் அளிக்கும் விதமாக பாலிவுட்டின் இளம் நடிகர் ரன்பீர் கபூர் இந்த பட்டியலில் 15 மில்லியன் டாலர்கள் சம்பளத்துடன் 30-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.http://bit.ly/1ImAoB8லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ஜோதிகா?

லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி பெற்றது. பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லாரன்ஸ் ‘நாகா’ என்னும் படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படமும் ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’ ஆகிய படங்களின் வரிசையில் ‘நாகா’, ‘நாகா 2’ உள்ளிட்ட பல பாகங்களாக எடுக்க இருக்கிறார் லாரன்ஸ். பேய் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் பேயாக ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை லாரன்ஸ், ஜோதிகாவிடம் கூறியதாகவும், கதையை கேட்ட ஜோதிகா நடிக்க சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகாவின் நடிப்பில் ‘36 வயதினிலே’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று ஜோதிகா கூறியிருந்தார். இதன் காரணமாக லாரன்ஸ் படத்தில் நடிக்க சம்மதித்திருப்பதாக கூறுகிறார்கள்.http://bit.ly/1ImAoB8

பிரஷாந்த் படத்தின் போஸ்டரை வெளியிடும் சிம்பு

பிரஷாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும படம் ‘சாஹசம்’. இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக அமண்டா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

பிரஷாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்காக மிகவும் கவனம் செலுத்தி இசையமைத்துள்ளார் தமன்.


இப்படத்துக்காக கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆராய்ச்சி எல்லாம் மேற்கொண்டு இசையமைத்துள்ளாராம். மேலும், இப்படத்தின் பாடல்களை அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா என மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து பாடவைத்துள்ளார். இப்பாடல்கள் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, இந்த போஸ்டரை நடிகர் சிம்பு நாளை மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளார்.http://bit.ly/1ImAoB8

விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி?

‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ‘நிக்கி கல்ராணி’. இப்படத்தில் நிக்கி பேயாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படம் வெற்றிபெறவே நிக்கிக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இவர் ஆதியுடன் இணைந்து நடித்த ‘யாகாவாராயினும் நாகாக்க’ படம் வெளியானது. இதுதவிர, பாபி சிம்ஹாவுடன் இணைந்து ‘கோ 2’ படத்திலும் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார்.


தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு தற்போது எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். எழில் ஏற்கனவே ‘தேசிங்கு ராஜா’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு ஒரு பெண்ணை தேடியதாகவும், அந்த கதாபாத்திரத்திற்கு நிக்கி கல்ராணி பொருத்தமாக இருப்பார் என்று நிக்கியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்களை படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.http://bit.ly/1ImAoB8

ரஜினியைவிட நான் ஸ்டைலா வேட்டி கட்டுவேன்: அமிதாப் பச்சன்

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத் துக்காக அவர்களை வைத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த விளம்பரப் படத்தை 3 நாட்கள் மும்பை யில் படமாக்கியுள்ளார் ஸ்ரீகுமார். அந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து… 

மீண்டும் தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: நா.முத்துக்குமார்

கவிஞரும் பாடலாசிரியருமான நா.முத்துக்குமாருக்கு இந்த ஆண்டிற்கான தேசிய விருது ‘சைவம்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகே அழகு...’ என்னும் பாடலுக்காக கிடைத்துள்ளது. இதன்மூலம் தேசிய விருதை நா.முத்துக்குமார் இரண்டாவது முறையாக பெறுகிறார். கடந்த வருடம் ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆனந்த யாழை...’ என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.

மீண்டும் தேசிய விருது கிடைத்திருப்பது பற்றி நா.முத்துக்குமார் கூறும்போது, ‘சைவம்’ படத்தில் நான் எழுதிய ‘அழகே அழகு...’ பாடலுக்காக 2014ம் ஆண்டிற்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது. அன்பையும், மனித நேயத்தையும் குழைத்து எழுதிய இந்தப் பாடலுக்கு தேசிய விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

தேசிய விருதை கார்த்திக் சுப்புராஜூக்கு சமர்ப்பிக்கிறேன்: பாபி சிம்ஹா

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் சிம்ஹா.
''ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த அளவுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேசிய விருது குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்டிப்பாக இந்த விருதுக்கு முழுக்க காரணம் நான் அல்ல... என் நண்பன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த விருதை கார்த்திக் சுப்புராஜூக்கும், 'ஜிகர்தண்டா' குழுவினருக்கும் சமர்ப்பிக்கிறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிம்ஹா.

விபத்தில் இறந்த தன் நண்பன் பெயரை மகளுக்கு வைத்த ஹாலிவுட் நடிகர்

ப்ரைன் ஓ கார்னர்என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார்.

அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான வின் டீசல்பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தாலும், விரைவில் திரைக்கு வர இருக்கும் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்திரைப்பட வரிசையின் 7 வது பாகமான ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு பவுலின்என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார்.

விழாவில் பேசிய அவர் வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா... அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன் என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஸ்தம்பித்து நின்ற வின் டீசலை ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தினர்.


பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

பாலிவுட்டிற்கு போகும் ஸ்ரீதிவ்யாவின் அக்கா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யாவின் மூத்த சகோதரி ஸ்ரீரம்யா, விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் யமுனா படத்தில் மட்டும் நடித்துள்ள ஸ்ரீரம்யாவால், தங்கை ஸ்ரீதிவ்யா போல், திரைத்துறையில் சோபிக்க இயலவில்லை. இதன்காரணமாக, அவர் சற்று ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், ஸ்ரீரம்யா, ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.