விஜய்க்கு 5வது இடம் கொடுத்த த்ரிஷா!


இப்போதுதான் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய விவாதம் ஓய்ந்தது. தான் எப்போதுமே தளபதிதான் அடுத்துதான் சூப்பர் ஸ்டார் என அந்த விவாதத்திற்கு விஜய்யே நேரடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆனால், இங்கு என்ன நடக்கிறதென்றே தெரியாமல் எரியுற கொள்ளியில் நெருப்பு வைத்த கதையால் தனக்குப் பிடித்த நடிகர் அஜித்தான் என அமெரிக்காவிலிருந்து அடுத்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் த்ரிஷா. விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த 'கில்லி' படத்திற்குப் பிறகுதான் த்ரிஷாவுக்கு ஒரு ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது. தொடர்ந்து அவர் ஜோடியாக “திருப்பாச்சி, ஆதி, குருவி” ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார். மற்ற தமிழ் ஹீரோக்களைக் காட்டிலும விஜய்யுடன்தான் த்ரிஷா அதிகப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படியிருக்க வட அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற ஒரு தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் த்ரிஷா. அப்போது அவரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் பட்டியலைக் கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். முதலில் தயங்கினாலும் அதன் பின் த்ரிஷா அவருக்குப் பிடித்த நடிகர்கள் என “அஜித், சூர்யா, விக்ரம், கமல், விஜய்” என சொல்லியிருக்கிறார். விஜய்யை விட மற்ற நடிகர்களுடன் சூர்யா குறைவான படங்களே நடித்திருக்கிறார்.

கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்திலும், சூர்யாவுடன் 'மௌனம் பேசியதே, ஆறு” ஆகிய படங்களிலும், விக்ரமுடன் “சாமி, பீமா” படங்களிலும், அஜித்துடன் “ஜி, மங்காத்தா” ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து கௌதம் மேனன் இயக்கி வரும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கப் போகிறார். த்ரிஷாவின் இந்த பதில் ஆச்சரியமாக உள்ளது.

No comments:

Post a Comment