வீதிக்கு வீதி மதுக் கடைகளைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் புகைப்படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும்!

கரூர்: கரூர் பேருந்து நிலையம் அருகே நல்ல குடிபோதையில் வந்த பள்ளிக் கூட மாணவர் ஒருவர், போதையின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தது பொதுமக்கள் அனைவரையும் அதிர வைத்தது. கருரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஒரு ஆட்டோ டிரைவரின் மகன் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 17). கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். இதே பள்ளியில் +1 பயிலும் இவரது ந்ண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

போதையின் உச்சத்திற்க்கு வந்த மாணவர்கள் சாலையை கடந்து பேருந்து நிலையத்திற்க்கு செல்ல முயன்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் கடந்து சென்ற நிலையில் போதையின் உச்சத்தில் இருந்த ராஜேஷ் திடீரென மயங்கி பேருந்து நிலைய நுழைவாயில் அருகே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி சீருடையிலேயே பட்டப்பகலில் மது அருந்தி பாதை தவறி செல்லும் மாணவனை கண்ட பொதுமக்க்ள் மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர்.

பள்ளி சீருடையில் பட்டப்பகலில் மது போதையில் மயங்கி விழுந்த விவகாரம் கரூரில் பெற்றோர்களை கதிகலங்க செய்துள்ளது. இந்த மாணவனின் புகைப்படத்தை சமூகத்தை சீரழிக்கும் மதுவையும், அதன் கடைகளையும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி அறிமுகம் செய்து திறந்து வைத்தவர்கள் பார்த்தால் நலமாக இருக்கும்!

No comments:

Post a Comment