கலைஞனின் கலை முக்கியமா? அந்தரங்கம் முக்கியமா?

Inline image 1
இரு தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைகாட்சியில் வந்த நடிகை மௌனிகாவின் பேட்டியில் தனக்கும் இயக்குனர் பாலு மகேந்திராவுக்கும் இடையே இருந்த உறவு பற்றிய சில செய்திகளை மௌனிகா பகிர்ந்து கொண்டார்... அதில்
லிவிங் டுகெதர் முறையில் இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் திடீரென்று ஒரு நாள் பாலுமகேந்திராவே​"​ உனக்கு தாலி வேண்டுமா? நான் தாலி கட்டினால் உனக்கு சந்தோசமா?​"​ என்று ​தன்னிடம் ​வினவியதாகவும் அதற்கு மௌனிகா சந்தோசம் என்று தனியாக ஒன்றுமில்லை ஆனால் தாலி அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும்​"​ என்று பாலுமகேந்திராவின் திரை பட நறுக் வசனம் போல தாம் பதில் கூறியதாகவும் சொன்னார்​.

மேலும் இருவரும் ஒரு சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கான தனி ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்தார்... பாலுமகேந்திரா குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் மௌனிகா அதற்கு பாலுமகேந்திராவின் புகழுக்கு பிறக்க போகும் குழந்தை மூலம் சமூகத்தின் சாடல் வரக்கூடும் எனக் கருதி அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார்... திருமணத்திற்கு முன்னும் பின்னும் கருகலைப்பு செய்ததாகவும் அந்த பேட்டியில் அவர் அறிவித்தார்.

ஒரு கலைஞனின் தனித்துவத்தை விமர்சனம் செய்யாமல் தனிப்பட்ட வாழ்க்கையை அலசி ஆராய்ந்து ஊடகங்கள் வெளியிடும் இது போன்ற செய்திகள் (இந்த செய்தியையும் சேர்த்து...) எவ்விதத்திலும் வரவேற்கதக்கதல்ல...

1 comment:

  1. I have been recently reading a lot about Balu Mahendra & Mounika...From what I have read, I have started to develop a huge respect & regards for Mounika !!!! Mounika is a rare selfless human being......May God Bless her immensely !!

    ReplyDelete